'கங்குவா' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு படக்குழுவுடன் தொடங்கவுள்ளது

#India #Actor #release #2023 #trailer #Movies #Movie
Mani
2 years ago
'கங்குவா' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு படக்குழுவுடன் தொடங்கவுள்ளது

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் "கங்குவா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை, கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

'கங்குவா' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பு ஒரு வாரம் நடைபெறும் என்றும் அதன்பின்னர் படப்பிடிப்புக்காக இந்த மாத இறுதியில் ராஜமுந்த்ரி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4