மகர ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
1 year ago
மகர ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மகர ராசியினர் அணியவேண்டிய மோதிரம் நீலக்கல். 

ராகு மற்றும் சனி தசை நடப்பவர்கள் இந்த நீலக்கல் பதித்த மோதிரத்தினை அணியலாம். 

மகர ராசியினர் நீலக்கல் மோதிரத்தினை அணிவதால் சமூகத்தில் நல்ல செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையை தரும். 

மேலும் நல்ல செல்வ வளம் மற்றும் நற்பண்புகளை கொடுக்கும். உடல் பலத்தை அதிகரிக்கும். ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையினை போக்கி வம்பு, வழக்குகள் ஏதேனும் இருந்தால் சாதகமான சூழலை உருவாக்கும்.