வீண் விவாதங்களில் ஈடுபடாமல் , கவனமுடன் செயல்பட வேண்டிய கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வீண் விவாதங்களில் ஈடுபடாமல் , கவனமுடன் செயல்பட வேண்டிய கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: பண வரவில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சிகளில் இன்று நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பரணி : பெரியவர்கள் ஆதரவுடன் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். பணம் பல வழிகளிலும் வரும். கார்த்திகை 1 : லாபசந்திரனால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ரோகிணி : உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். திருவாதிரை : நினைத்ததை இன்று செய்து முடிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும். புனர்பூசம் 1,2,3 : பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் சில சங்கடத்தை சந்திக்க வேண்டி இருக்கும். பூசம் : நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர். ஆயில்யம் : மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரச்னை உருவாகும்.

சிம்மம்

மகம் : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். நண்பர்கள் உதவியால் ஆதாயம் மகிழ்ச்சி உண்டாகும். பூரம் : எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1 : வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்.

கன்னி: 

உத்திரம் 2,3,4 : வழக்கினால் ஏற்பட்ட சங்கடம் அகலும். உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபத்தை காண்பீர்கள். அஸ்தம் : மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த வரவு வரும். நன்மை நடந்தேறும். சித்திரை 1,2 : தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்.

துலாம்

சித்திரை 3,4 : பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். சுவாதி : குடும்பத்திற்குள் கருத்து பேதம் உண்டாகும் என்றாலும் அதை சமாளித்து லாபம் காண்பீர்.மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் முயற்சி முன்னேற்றம் காணும் நாள். பணவரவு குடும்ப மகிழ்ச்சியை அதிகரிக்கும். அனுஷம் : மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும். கேட்டை : வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான நிலை உண்டாகும்.

தனுசு

மூலம் : கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பூராடம் : நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். உங்கள் முயற்சி லாபம் தரும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4 : உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம் : வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அவிட்டம் 1,2: புதிய வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வர வேண்டிய பணம் வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: புதிய பாதையில் பயணிப்பீர். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகுவர். மனக்குழப்பம் அகலும். சதயம் : குடும்பத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர். உங்கள் விருப்பப்படி செயல்படுவீர்கள். பூரட்டாதி 1,2,3 : அலுவல் பணியில் எதிர்பார்த்தவர்களுக்கு சலுகை கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்

பூரட்டாதி 4 : தேவையற்ற பிரச்னைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரால் எதிர்பாராத செலவு தோன்றும். உத்திரட்டாதி : வேலை பளு அதிகரிக்கும். பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். ரேவதி : உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. இன்று வரவை விட செலவு அதிகரிக்கும்.