பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு

#India #Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு

எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் பிரபுதேவா தனது இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'வுல்ஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சுகுரியன், ஸ்ரீகோபிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தத் திரைப்படம் வரலாற்றுக் காலம் முதல் இன்று வரையிலான ஒரு திகில் கதையம்சத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4