திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காணும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காணும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றி பெறும். குடும்பத்தினர் எண்ணமறிந்து செயல்படுவீர். பரணி : உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆலய வழிபாட்டில் ஈடுபடுவீர். கார்த்திகை 1 : பண வரவில் இருந்து வந்த தடை விலகும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : தொழிலில் உண்டான தடை விலகும். உறவினர் உதவியால் ஒரு முயற்சி நிறைவேறும். ரோகிணி : உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2 : கூட்டுத்தொழிலில் இருந்து வந்த தடை விலகும். பயணத்தில் லாபம் தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசிப்பீர். திருவாதிரை : பிறர் உதவியுடன் நேற்றைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும். புனர்பூசம் 1,2,3 : பெற்றோரின் உதவியால் பொருளாதாரநிலை உயரும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்.

கடகம்

புனர்பூசம் 4 : பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூசம் : மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். ஆயில்யம் : புதிய முயற்சி இழுபறியாகும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. அமைதி தேவைப்படும் நாள்

சிம்மம்:

மகம் : வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி நிறைவேறும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். பூரம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும். உத்திரம் 1: உங்களை விட்டு விலகிச் சென்றவர் உங்கள் இல்லம் தேடி வருவார். செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4 : எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். அஸ்தம் : கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். சித்திரை 1,2 : மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார். உங்கள் நிலை உயரும். 

துலாம்:

சித்திரை 3,4 : குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். மனதில் நல்ல மாற்றம் உண்டாகும்.உற்சாகம் அதிகரிக்கும். சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். சொத்து சேர்க்கை உண்டாகும். விசாகம் 1,2,3 : தடைகளை நீக்கி செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : தாய் வழி உறவினர்களால் சிலசங்கடம் தோன்றும். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். அனுஷம் : உங்கள் முயற்சி இழுபறியாகும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர். தொழில் விருத்தியாகும். கேட்டை : குடும்பத்தினர் ஆதரவுடன் நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர். குலதெய்வ வழிபாடு நிறைவேறும். 

தனுசு

மூலம் : சகோதரர்களால் சில சங்கடம் ஏற்படும். உங்கள் மனம் இன்று ஓய்வை விரும்பும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1 : விரும்பிய இடத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர். சங்கடம் விலகும் நாள்.

மகரம்:

உத்திராடம் 2,3,4 : திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி அடைவீர். லாபமான நாள். திருவோணம் : பொது நலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2 : உங்கள் எண்ணத்தை நண்பர்கள் உதவியுடன் நிறைவேற்றி மகிழ்வீர். பழைய கடன் அடைபடும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரும் வரவை வைத்து நெருக்கடியை சரி செய்வீர். சதயம் : செயலில் இருந்த சங்கடம் நீங்கும். தைரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உங்களைத்தேடி புதிய நபர் வருவார்கள். 

மீனம்:

பூரட்டாதி 4 : செலவு அதிகரித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணத்தில் விழிப்புணர்வு அவசியம். உத்திரட்டாதி : உறவினர்களால் சில சங்கடம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த ஒன்று உங்களைத் தேடி வரும்.