அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

#SriLanka #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்சுலின் வழங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட சப்ளையர், தேவையான அளவு இன்சுலின் வழங்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

 தட்டுப்பாடு காரணமாக மேலும் இரு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்சுலின் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

 தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இன்சுலின் அடங்கிய 50,000 பொதிகள் அவசர கொள்வனவாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் குறித்த பங்கு இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4