துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' 3 மொழிகளில் வெளியாக உள்ளது

#India #Cinema #Actor #TamilCinema #release #2023 #Tamilnews #Kerala #Movie
Mani
2 years ago
துல்கர் சல்மான் நடிக்கும்  'லக்கி பாஸ்கர்' 3 மொழிகளில் வெளியாக உள்ளது

துல்கர் சல்மான் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை சேர்த்துள்ளார். `பான்' இந்தியா நடிகராகவும் உயர்ந்துள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு "லக்கி பாஸ்கர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் தயாராகிறது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார். தற்போது துல்கர் சல்மான் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கியமான கருவை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தை வெங்கி அட்லூரி டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்களே படத்தின் மையக்கருவாக இருக்கும் என்றும், இந்தப் படம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.இசை ஜி.வி.பிரகாஷ். இப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4