தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் கனமழை!
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியான நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெல்லியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியபோது, நகரமே மழைநீரில் மூழ்கியது. அதன்பின் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. பதார்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வசந்த் விஹார் பகுதியில் உள்ள சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.