பிரான்ஸில் அகதிகள் படகை தடுக்க முற்பட்ட காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர்

#Police #France #Attack #Lanka4 #Refugee #தாக்குதல் #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் அகதிகள் படகை தடுக்க முற்பட்ட காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர்

பிரித்தானியா நோக்கிச் செல்ல முயன்ற அகதிகளை தடுக்க முற்பட்ட காவல்துறையினரை நேற்று வெள்ளிக்கிழமை அவ்வகதிகள் பா-து-கலே கடற்பிராந்தியத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.

Sangatte கடற்பகுதியில் காவல்துறையினர் இருவர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அகதிகள் பலர் படகு ஒன்றில் ஏறி பிரித்தானியா நோக்கி செல்ல முற்படுவதை பார்த்துள்ளனர். 

அவர்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயற்சி செய்தனர். அதன்போது அகதிகள் இணைந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை வீசி அவர்களை தாக்கினர்.

முன்னதாகவே ஏனைய காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியிருந்ததால், அங்கு மேலதிகமானோர் வருகை தந்து இத்தாக்குதலை முறியடித்ததுடன் மூன்று அகதிகளையும் கைது செய்தனர். மேற்படி தாக்குதலில் காயமடைந்த காவல் துறையினருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4