வெளியானது சந்திரமுகி 2-ன் கங்கனா ரனாவத் போஸ்டர்!

#India #Cinema #Actress #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
வெளியானது சந்திரமுகி 2-ன் கங்கனா ரனாவத் போஸ்டர்!

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தில் கங்கனா ரனாவத்தின் தோற்றத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பாகத்தில் ‘ஜோதிகா’ ஏற்று நடித்த ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் கங்கனா நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4