’ஒரு தலை ராகம்’ திரைப்படத்தில் நடித்த கைலாஷ் நாத் என்ற பிரபல மலையாள நடிகர் இன்று காலமானார்!

#India #Cinema #Death #Actor #TamilCinema #Tamilnews #Died
Mani
1 year ago
’ஒரு தலை ராகம்’ திரைப்படத்தில் நடித்த கைலாஷ் நாத் என்ற பிரபல மலையாள நடிகர் இன்று காலமானார்!

சீனியர் தலைமுறை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று ஒரு தலை ராகம். 80களில் வெளியான அந்த திரைப்படம் இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது. அஷ்டவதானி டி.ராஜேந்தருக்கு அப்பால் திரைப்படத்தில் நடித்த பல்வேறு நடிகர்களுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு.

கதைப்படி வில்லனான ரவீந்தருக்கு அல்லக்கையாக, ’தம்பு’ என்ற கல்லூரி மாணவன் வேடத்தில் கைலாஷ் நாத் நடித்திருப்பார். அவரளவில் அந்த வேடத்துக்கு நியாயமான பங்களிப்பை செய்திருப்பார். தமிழில் அதன் பிறகும் பெரிதாக தலைகாட்டவில்லை என்றாலும், தாயகமான மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கேரளாவின் முன்னார் பகுதியில் பிறந்தவர் கைலாஷ் நாத். மாணவப் பருவத்தில் மிமிக்ரி மற்றும் நாடகங்களில் அவர் காட்டிய ஆர்வமே பின்னாளைய திரைப்பட அனுபவத்துக்கு அவரை தயார் செய்தது. மலையாளத்தில் 1977-ம் ஆண்டு வெளியான ’விடருன்னா மோட்டுகள்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த ’யுகபுருஷன்’, ’ஏதோ ஒரு ஸ்வப்னம்’ உள்ளிட்ட படங்கள் கேரளத்தில் அவருக்கு புகழ் வாங்கித் தந்தன. சின்னத்திரையிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார்.

65 வயதாகும் கைலாஷ் நாத், கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மாலை திடீரென அவர் மரணமடைந்தார். அவரது கல்லீரல் பாதிப்பு என்பது குடியால் நிகழ்ந்தது அல்ல; அதிகப்படி கொழுப்பு கல்லீரலில் படிவதால் ஏற்படக்கூடியது என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!