அனைத்து உள்ளுரட்சி மன்றங்களுக்கும் இணையம் மூலம் பணம் செலுத்துமுறை அறிமுகப்படுத்தப்படும்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
அனைத்து உள்ளுரட்சி மன்றங்களுக்கும் இணையம் மூலம் பணம் செலுத்துமுறை அறிமுகப்படுத்தப்படும்!

இந்த வருட இறுதிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.  

இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே 69 உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், நிர்மாணத்துறைக்கு தேவையான அனுமதிகளை ஆன்லைன் முறையின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உள்ளுராட்சி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

மக்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4