நிதானமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடையும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
நிதானமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடையும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : காலையில் இருந்த நெருக்கடி அதன்பின் நீங்கும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும். பரணி : நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த பொருளாதார நிலை உயரும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த தகவல் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் இன்று அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும். ரோகிணி : வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப்பணியில் வேலை பளு அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : வரவுக்கு மிஞ்சிய செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர். இன்று புதிய முயற்சியும் முதலீடும் வேண்டாம்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4 : தடைபட்டிருந்த தொழில் வருவாய் வரும். நிதிநிலை உயரும். கடன்களை அடைப்பீர். திருவாதிரை : புதிய நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னை விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

கடகம்

புனர்பூசம் 4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். பூசம் : வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ஆயில்யம் : தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்

மகம் : உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். நிதானமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். பூரம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள். திறமையுடன் செயல்பட்டு எதிர்பார்த்தவற்றில் லாபமடைவீர்கள். உத்திரம் 1 : அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்வீர்.

கன்னி:

உத்திரம் 2,3,4 : நீங்கள் விரும்பாத செயல் நடப்பதற்கு இன்று வாய்ப்புண்டு. முயற்சி இழுபறியாகும். அஸ்தம் : பணியாளர்கள் ஒரு சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். கவனமுடன் பணியாற்றவும். சித்திரை 1,2: மனதில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பு நிறைவேறும். கவனமுடன் செயல்பட நன்மை அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4 : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர். வெளியூர் பயணம் ஆதாயத்தை உண்டாக்கும். சுவாதி : நண்பர்களால் ஒரு செயலில் வெற்றி காண்பீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3 : உங்கள் செயல்களில் இன்று தெளிவு இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன் தரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றியடைவீர்கள். அனுஷம் : ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிரி இடம் மாறுவர். உங்கள் செல்வாக்கு உயரும். கேட்டை: நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு செய்வீர்கள். மற்றவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயமடைவீர்.

தனுசு

மூலம் : பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து பாராட்டிற்கு ஆளாவீர்கள். பூராடம்: சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உத்திராடம் 1 : பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர். அவர்களுக்காக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : அரசாங்க விவகாரங்களில் நிதானம் தேவை. இல்லையெனில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். திருவோணம் : அறிமுகம் இல்லாதவருடன் பழக ஈடுபட வேண்டாம். இல்லாவிடின் சங்கடங்களுக்கு ஆளாவீர். அவிட்டம் 1,2: மற்றவரின் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4 : இழுபறியாக இருந்த ஒரு முயற்சியில் இன்று வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும் நாள். சதயம் : உங்கள் செயலில் கவனம் செலுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3 : ஆரோக்கியத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் முழு கவனமும் செல்லும்.

மீனம்

பூரட்டாதி 4 : வரவு செலவில் இருந்த சங்கடம் தீரும். பழைய முதலீட்டில் இருந்து இன்று லாபம் காண்பீர். உத்திரட்டாதி : வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ரேவதி : அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். கடனாக கேட்ட தொகை வரும்.