ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

#India #Terrorist #Tamilnews #Breakingnews #IndianArmy #ImportantNews
Mani
2 years ago
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள திக்வார் துணை மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இறுதியில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவா்கள் யார்? குறிவைக்கப்படும் குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பு குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் தீவிரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடந்த இரண்டாவது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4