'மாவீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

#India #Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
'மாவீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி, படம் வரும் 11ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4