பிரான்ஸில் காவல்துறையினரிடமிருந்து தப்பியோர் விபத்தில் பலி

#Police #France #Accident #Lanka4 #விபத்து #வாகனம் #பொலிஸ் #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் காவல்துறையினரிடமிருந்து தப்பியோர் விபத்தில் பலி

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட இருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

 இச்சம்பவம் சனிக்கிழமை இரவு Limoges (Haute-Vienne) நகரில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த இருவரை சோதனைகளுக்காக தடுத்து நிறுத்தினர்.

 ஆனால் இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இருந்து அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றனர். வேகமாக சென்ற அவர்கள் நேரே ஒரு மகிழுந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானர்கள். 

விபத்தில் ஸ்கூட்டரை செலுத்திச் சென்ற 16 வயதுட நபர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். 32 வயதுடைய இரண்டாவது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 காவல்துறையினர் தடுத்து நிறுத்திய இடத்தில் இருந்து 400 மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4