சுவிட்சர்லாந்தில் ஒருவர் தனது கழிவுகளை அகற்றிக்கொள்ளும் முறை
கழிவுகளை அகற்றுவதற்கு கிராமசபைகளே பொறுப்பாகும். ஆதலால் ஒவ்வொரு கிராமசபைக்கும் தனிப்பட்ட விதிகளுண்டு. கழிவுகளைப் பிரித்து வித்தியாசப்படுத்தி அதற்கென உள்ள சேர்க்குமிடங்களில் போடவேண்டும்.
கழிவுகளைப்பிரித்தல் / மறுசுழற்சி
கழிவுகளைப்பிரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பணத்தைச் சேமிக்கவும் முடிகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய கழிவுகளை விசேட சேர்க்குமிடங்களில் அல்லது சேர்க்கலாம் (பேப்பர்,பற்றரி, கண்ணாடி, மட்டை, பச்சைக்கழிவுகள், அலுமினியம், உலோகம், துணிகள், எண்ணெய் என்பன) இந்தக்கழிவுகள் வீட்டுக்குப்பைகளுடன் சேராது.
ஒவ்வொரு கிராமசபையும் தமக்கென கழிவுகளை அகற்றும் அட்டவணை (Entsorgungsplan) அல்லது கழிவு நாட்காட்டி (Abfallkalender) கொண்டுள்ளது இதை கிராமசபையில் பதிவு செய்யும்போது பெற்றுக்கொள்ளலாம். அதில் எந்தக் கழிவுகளை எங்கே அகற்றலாம் எனப் போடப்பட்டிருக்கும். கழிவுகளை எரிப்பதோ அன்றி வழங்கப்பட்ட இடங்களன்றி வேறு இடங்களில் இறக்கிவைப்பதோ தவிர்க்கப்படவேண்டும்.
பிளாஸ்ரிக் போத்தல்கள் (PET-Flaschen) மற்றும் வேறு பக்கற் மட்டைகளை எல்லா விற்பனை நிலையங்களிலும் இலவசமாக அகற்றலாம்.
கழிவகற்றும் பைகள் / கழிவகற்றும் முத்திரை
மீள்சுழற்சி செய்யமுடியாத குப்பைகளை (வீட்டுக்கழிவுகள்) உத்தியோகபூர்வமான கழிவகற்றும் பைகளில் அல்லது கழிவகற்றும் முத்திரை ஒட்டிய பைகளில் அகற்றவேண்டும்.
கழிவகற்றும் பைகள் அல்லது முத்திரையின் விலைக்குள் கழிவகற்றும் கட்டணமும் அடங்குகிறது. ஓவ்வொரு கிராமசபைக்கும் தனிப்பட்ட பைகளும் முத்திரைகளும் உள்ளது இவைகளை விற்பனை நிலையங்களிலோ அல்லது கிராமசபையிலோ நாமே வாங்கவேண்டும்.
கழிவுப்பைகளை கிழமையில் ஒரு குறிப்பிட்ட நாளுக்குத்தான் வீதிக்கரைகளில் (அல்லது அரிதாக வேறு சேர்க்குமிடங்களில் ) வைத்தால் எடுத்துச்செல்வார்கள். வேறு நாட்களில் கழிவகற்றும் பைகளை வீதியில் வைக்கக்கூடாது. பல குடும்பங்கள் வாழுமிடங்களில் சிலவேளை விசேட கழிவுக் கொள்கலன் வைத்திருப்பார்கள். ஏதாவது கேள்விகள் இருப்பின் வாழும் கிராமசபை அல்லது அயலவர்களிடம் கேட்கலாம்.
சிறப்புக்கழிவுகள்
நச்சுப் பொருட்களைக் கொண்ட மற்றும் சூழலை மாசுபடுத்தக்கூடிய சிறப்புக் கழிவுகளை (Sonderabfälle) விசேடமுறைகளில் அகற்றவேண்டும்.
உதாரணமாக நிறங்கள் இரசாயனப்பொருட்கள் பற்றரிகள் இலத்திரனியல் உபகரணங்கள் சக்திசேமிக்கும் மின்குமிழ்கள் பாவனைக்காலம் முடிந்த மருந்துகள் என்பன.
மேலுள்ள பொருட்கள் வீட்டுக்கழிவுகளுக்கள் அடங்காது. அதிகமான பொருட்களை வாங்கிய இடத்திலேயே கொண்டு போய் அகற்றலாம். உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் அவர்கள் பொருட்களின் கழிவுகளை இலவசமாக அகற்றவதற்கு அவர்களே உதவவேண்டும்.