டோனி வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகசப் போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேலும், பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
யானைகள் சரணாலயமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. யானைகளுக்கு பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தும், பார்வையிட்டனர். தற்போது, பழங்குடியின சமூகத்தால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார்.