கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

#SriLanka #Bank #Central Bank
Mayoorikka
2 years ago
கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சிறியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 அதன்படி, கடந்த ஜூலை மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,762 மில்லியன் (3.7பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 கடந்த ஜூன் மாதம் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு 3,724 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

 இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4