துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

#India #Cinema #TamilCinema #release #trailer #Kerala #Movie
Kanimoli
2 years ago
துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகியுள்ள   'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிங் ஆஃப் கோதா'. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.

திரையுலகில் துல்கர் சல்மானின் 11 வருட பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் 'கிங் ஆஃப் கோதா' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அதன்படி 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் நாளை (9ம் தேதி) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4