'அடியே' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

#India #Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
'அடியே' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கௌரி, மிர்சி விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது வைலாகி வருகிறது.

‘அடியே’ படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4