கவனத்தை ஈர்க்கும் 'ஜவான்' படம் புதிய போஸ்டர்!

#Cinema #Actor #TamilCinema #release #Tamilnews #Movie
Mani
2 years ago
கவனத்தை ஈர்க்கும் 'ஜவான்' படம் புதிய போஸ்டர்!

ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். கோலிவுட்டில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என நான்கு பிரம்மாண்ட படங்களை இயக்கிய அட்லீ, இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மொட்டை தலையுடன் ஷாருக்கான் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4