வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலன் ஒன்று புகையிரதத்துடன் மோதியுள்ளது

#SriLanka #Accident #Lanka4 #Train
Kanimoli
2 years ago
வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலன் ஒன்று புகையிரதத்துடன் மோதியுள்ளது

வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலன் ஒன்று புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பௌசி அலுவலக புகையிரதத்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.

 ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரத சமிஞ்ஞைகள், மின்கம்பங்கள், புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இந்த விபத்தால், ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பல ரயில்கள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4