முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

#India #Hindu #Arrest #Court Order #Tamilnews #Case
Mani
1 year ago
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது கொலை முயற்சி, கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி தொழிலாளி இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, சந்திரபாபு மற்றும் 20 பேர் மீது 120பி,147,148,153,307,115,109,323,324,506 ஆர்/டபிள்யூ 149 ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் அன்னமய்யா மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் 70 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு உள்பட 20- க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ரோட் ஷோ-வில் பங்கேற்றார். அப்போது அன்னமய மாவட்டம் தம்பல்லப்பள்ளி தொகுதிக்குட்பட்ட அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டுருந்தபோது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை தூண்டிவிட்டு சந்திரபாபு பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க சென்ற காவல்துறையினரை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு,காவல் துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களை வன்முறை செய்யும் விதமாக தூண்டியதற்காக சந்திரபாபு, முன்னாள் அமைச்சர் தேவிநேனி உமா உள்பட 20 க்கும் மேற்ப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!