நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?
Europe இல் வசிக்கும் 35 வயதான குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. "இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில்ல்கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
என்னுடைய பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரகம் செயல் இழந்தது போன்ற சிக்கல்கள் எழுந்ததால் அவர்கள் உயிரிழந்தனர்," என ஊடகம் ஒன்றிடம் அவர் கூறினார்.
ஜோதி இப்போது மருந்துகள் எடுத்துக் கொள்கிறார். நடுத்தர வயது கொண்டவர்களிடம் நீரிழிவு நோய் ஏன் அதிகரித்துள்ளது? "நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்," என இந்திய நீரிழிவு நோய் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.
அவர் பிபிசியிடம் மின்னஞ்சல் வழியே தனது கருத்துகளை பரிமாறிக்கொண்டார்.
அதிக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு இட்டுச்செல்வதற்கான முக்கியமான காரணங்கள் என்றும் அவர் கூறினார்.
ஜோதி போன்ற நடுத்தர வயதில் உள்ளவர்கள் நீரிழிவால் பாதிக்கப்படுவது ஏன்? அவருடைய குடும்பத்தினரின் முந்தைய நீரிழிவு வரலாறு அல்லது அவரது வாழ்க்கை முறை காரணமாக அவருக்கு நீரிழிவு வந்ததா? குடும்பத்தினருக்கு ஏற்கனவே நீரிழிவு இருந்ததற்கான வரலாறு, வாழ்க்கை முறை பழக்கங்கள் ஆகியவை நீரிழிவு நேரிடுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கின்றன என மருத்துவர் மிஸ்ரா கூறுகிறார்.
ஆலுபூரி, பன்னீர், கோழி இறைச்சி, பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் என தன்னுடைய தினசரி உணவுத் திட்டத்தின்படி உணவு உட்கொள்வதாக ஜோதி கூறினார். நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டவுடன் தன்னுடைய உணவு பழக்கத்தை மாற்றினாரா என்று கேட்டபோது, "எங்களுடைய தினசரி உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யவில்லை.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உணவை விரும்புகின்றனர். நல்ல உணவு உண்ணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, நீரிழிவுக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டபோதிலும், நான் விரும்புவதை உண்கின்றேன்," என்றார்.
https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL
தகவல் மற்றும் ஆலோசனை