சுவிட்சர்லாந்தில் வீட்டுக்குடியிருப்பொன்றை எவ்வாறு வாங்கலாம் ?

#Switzerland #சுவிட்சர்லாந்து #சுவிஸ் #சுவிஸ்சர்லாந்து #Swiss
சுவிட்சர்லாந்தில் வீட்டுக்குடியிருப்பொன்றை எவ்வாறு வாங்கலாம் ?

சுவிஸில் அதிகமானோர் வாடகைக் குடியிருப்புகளிலேயே வாழுகின்றனர். குடியிருப்புத் தேடுவது இலகுவானதல்ல அதே சமயம் வாடகைகளும் கூட.

 குடியிருப்புச் சந்தை நிலவரம்

 சுவிஸின் அதிகூடிய மக்கள் வாடகைக் குடியிருப்புக்களிலேயே வாழுகின்றனர். வீடு கட்டும் நிலப்பகுதிகள் குறைவானபடியால் கிராமசபைகளின் நடுவே காலிக் குடியிருப்புகள் குறைவு. 

வாடகையும் கூட. வருமானத்தின் கால்வாசி வீட்டு வாடகைக்குச் செலவு செய்வது விதி விலக்கல்ல. குடியிருப்புகளை நகர மத்தியில் தேடாமல் சற்றுத் வெளியே தேடுவது பிரயோசனப்படும்.

 அதிகமாகச் சிறிய இடங்களுக்குக்கூட நல்ல பகிரங்கப் போக்குவரத்து தொடர்புள்ளது.

 குடியிருப்பு / வீடு தேடுதல்

 குடியிருப்பு வசதி வாய்ப்புக்களை அதிகமான இணையத்தளப்பக்கங்களில் காணலாம். அந்தப் பகுதிக்குரிய பத்திரிகைகளில் வீட்டு விளம்பரங்கள் வெளியாகும்.

 சில வீட்டுரிமையாளர்கள் வீட்டு விளம்பரங்களை விற்பனை நிலையங்களிலுள்ள தகவல் பலகையிலோ அன்றி வேறு இடங்களிலோ (உ+மாக. கிராமசபை நிர்வாகம் ) வெளியிடுவர். அதிகமான குடியிருப்புகள் பகிரங்கமாக எழுதப்படுவதில்லை.

 ஆதலால் உறவுகள் மூலமோ அன்றி நண்பர்கள் மூலமோ கேட்டறிந்து கொள்ளலாம்.

 வாடகைக்கு விண்ணப்பித்தல்

 எவருக்கு ஒரு குடியிருப்புப் பிடித்துள்ளதோ அவர் வீட்டுரிமையாளரிடமோ அன்றி வீட்டு நிர்வாகத்திடமோ தொடர்பு கொண்டு ஒரு பார்வையிடும் நேரத்தைக் குறிக்கலாம்.

 வீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் சாதாரணமாக ஒரு பதிவுப்பத்திரத்தை நிரப்பிக் கொடுக்கவேண்டும். அதை விட அதிக வீட்டுரிமையாளர்கள் வசூலிப்பு இலாகாப் பதிவேட்டையும் (Betreibungsregisterauszug) வருமானத்தை மேலோட்டமாக அறியவும் விரும்புவர். 

இந்தப் பதிவேட்டை வசூலிப்பு இலாகாவில் (Betreibungsamt) பெறலாம். ஒரு வீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் ஒரே நேரத்தில் பல குடியிருப்புகளுக்கு விண்ணப்பிப்பது அறிவுறுத்தப்புடுகிறது.

 குடியிருப்பு / வீடு வாங்குதல்

 வதிவிட உரிமை C உள்ள வெளி நாட்டவர்கள் அறோ மாநிலத்தில்குடியிருப்புகள் வீடுகள் வாங்குவது கட்டுப்படுத்தப்படவில்லை. இது EU/EFTA நாட்டுப் பிரஜைகள் இங்கு வதிவிட உரிமை B இருந்தாலும் பொருந்தும். 

வேறு நாட்டவர்கள் வதிவிட உரிமை B இருந்தால் அவர்கள் வதிவதற்கு மட்டும் ஒரு குடியிருப்பு அல்லது வீடு வாங்கலாம். மற்றைய வதிவிட உரிமைகள் (L, F ) உள்ளவர்கள் குடியிருப்பு அல்லது வீடு வாங்குவதற்குச் சாத்தியமில்லை. துல்லியமான தகவல்களை பொறுப்பான காணிக் கந்தோரில் அறியலாம் (Grundbuchamt).

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!