யாழில் போதைக் பொருட்களுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
யாழில் போதைக் பொருட்களுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4