விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் டிரைலர் வெளியானது

#Cinema #Actor #Actress #TamilCinema #2023 #trailer #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் டிரைலர் வெளியானது

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தின் தயாரிப்பாளர்கள். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், 'ரோஜா சினிமா மாதிரி இருக்கு காஷ்மீர்' போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4