வியாபாரத்தில் திறமையை வெளிப்படுத்தும் நான்கு ராசியினர் அதிலும் மகர ராசிக்காரர்களுக்கான - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபாரத்தில் திறமையை வெளிப்படுத்தும் நான்கு ராசியினர்  அதிலும் மகர ராசிக்காரர்களுக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் செயல் வெற்றியால் புதிய நட்பினை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பரணி : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தடையான செயல் நிறைவேறும். வியாபார பாதிப்பு நீங்கும். கார்த்திகை 1 : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரவு அதிகரிக்கும். உறவினருடன் உண்டான பிரச்னை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : மனதில் புதிய திட்டம் உருவாகும். நண்பர்கள் ஆதரவை நாடுவீர். கவனமுடன் செயல்படவும். ரோகிணி : மற்றவரை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டு. உங்கள் செயல்களில் கவனம் தேவை. மிருகசீரிடம் 1,2 : எதிர்பாராத பிரச்னை தோன்றும். டென்ஷன் அதிகரிக்கும். உடன்பணி புரிபவருடன் மோதல் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். திருவாதிரை : உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வீர். நட்பு வட்டம் விரிவடையும். புனர்பூசம் 1,2,3 : முயற்சி இழுபறியாகும் என்பதால் செயல்களில் நிதானம் தேவை. புதிய முதலீடு இன்று வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4 : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூசம் : விஐபிகள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும். ஆயில்யம் : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம் : தொழிலில் இருந்த தடை விலகும். கடனாக கொடுத்திருந்த பணம் வரும். புதிய முயற்சி இன்று வேண்டாம். பூரம் : சோர்வு நீங்கும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு மதிப்புண்டாகும். உத்திரம் 1 : தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். நீங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சி வெற்றியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அஸ்தம் : கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலை குறித்த நல்ல தகவல் வரும். சித்திரை 1,2 : பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் நாள். 

துலாம்

சித்திரை 3,4 : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சுவாதி : பணிபுரியும் இடத்தில் சில பிரச்னைகள் உருவாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். விசாகம் 1,2,3 : செயல்களில் தடுமாற்றம் கூடும். விழிப்புடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4 : நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். அனுஷம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட முரண்பாடு விலகும். கேட்டை : வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம் : நீங்கள் எதிர்பார்த்தவை இன்று நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். பூராடம் : மற்றவர்களால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் 1 : உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். திருவோணம் : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள். அவிட்டம் 1,2 : உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பெற்றோர் ஆதரவால் ஒரு முயற்சி வெற்றியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. சதயம் : மறைமுக எதிரிகளால் உண்டான பிரச்னைகளை இல்லாமல் செய்வீர். நண்பர்கள் நன்மை உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : செலவுகளின் காரணமாக வருமானத்தில் உங்கள் கவனம் செல்லும். முயற்சி ஒன்று நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் செயலில் தெளிவு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்திரட்டாதி : வழக்கமான செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நம்பிக்கை உண்டாகும். ரேவதி : பணி புரியும் இடத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் ஆதாயம் உண்டாக்கும்.