இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய்
இளம் பெண்களிடம் நீரிழிவு நோய் பரவல் என்பது 2000ஆம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருவதாக மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.
இது குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விவரிக்கிறார். இந்த ஆய்வுகளில், குறிப்பாக நகரங்களில் வசிக்கும் இளைஞர்களிடம் அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோய் நிகழ்வுகள் காணப்படுவது தெரியவந்திருப்பதாக கூறினார்.
இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2015-16 ஆம் ஆண்டில் 1.29 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானது. 12 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL
தகவல் மற்றும் ஆலோசனை