ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!

#India #Cinema #Actor #TamilCinema #release #2023 #Tamilnews #rajini kanth #Movie
Mani
2 years ago
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த 'ஜெயிலர்' திரைப்படம், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் இரவு 9 மணிக்கு (FDFS) வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். ஜெயிலரின் முதல் தோற்றம் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4