சுவிட்சர்லாந்தில் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை பாவனை

#Switzerland #சுவிட்சர்லாந்து #சுவிஸ் #சுவிஸ்சர்லாந்து #Swiss
சுவிட்சர்லாந்தில் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை பாவனை

போதைப் பொருட்கள் வைத்திருப்பது, பாவிப்பது அன்றி விற்பனை செய்வது தண்டணைக்குரியது. மதுபானம் புகையிலை வாங்குவதற்கும்; வயதெல்லை உண்டு.

 போதைப் பொருட்கள்

 சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருத்தல், விற்றல் அல்லது பாவித்தல் தண்டணைக்குரிய குற்றம். இது சிறிய அளவிற்கும் பொருந்தும். இதில் எவை சட்டவிரோதமாவை என்பது மருந்துப்பாவனைச்சட்டத்தில் (Betäubungsmittelgesetz) வரையறுக்கப்பட்டுள்ளது.

 போதைப்பொருட்களின் வணிக அடிப்படையான விற்பனையானது அதிகூடிய தண்டணைக்குட்படலாம். 

மதுபானமும் புகையிலையும்

 மதுபானமும் புகையிலையும் வாங்குவதற்கும் வயதெல்லை உண்டு. அறோ மாநிலத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளையவர்களுக்கு மதுபானவகைகள் சிகரெட் வகைகள் விற்பனை செய்யக்கூடாது. 

சில மதுபானவகைகளை உம்: Spirituosen 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தான் விற்பனை செய்யலாம்.

 புகைத்தலுக்குத் தடை

 சுவிஸில் புகைத்தலுக்குத் தடை செய்யப்பட்ட விதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வித்தியாசப்படுகிறது. புகைத்தலால் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாக்கும் மத்திய அரசுச் சட்டத்தை அறோ மாநிலமும் ஆதரிக்கிறது. 

அதைவிட மேலதிக சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. புகைத்தல் தடை செய்யப்பட்ட இடங்களாவன:

 மூடப்பட்ட பகிரங்க நுழைவாயில் கொண்ட இடங்கள் (வைத்தியசாலை, நிர்வாகக் கட்டிடங்கள், பாடசாலை, தொல்பொருட்காட்சியகம், சினிமா கொட்டகை, புகையிரதம், பஸ், கடைகள், கடைத்தொகுதிகள் ) பலபேர் சேர்ந்து வேலை செய்யுமிடங்களில் புகைக்கக்கூடாது.

 உணவகங்களின் அளவைப் பொறுத்து புகைத்தலுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உணவகங்களில் புகைக்கும் அறைகள் உள்ளன.