மியான்மரில் படகு விபத்தில் 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு

#world_news #search #Tamilnews #Boat
Mani
2 years ago
மியான்மரில் படகு விபத்தில் 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகு கடலில் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வங்காளதேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பித்து ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா மற்றும் இந்தோனேசியாவை அடைய முயற்சிக்கின்றனர்.

மலேசியா நோக்கிச் சென்ற படகில் 50க்கும் மேற்பட்ட அகதிகள் மேற்பட்ட பயணம் செய்தனர். நேற்றைய நிலவரப்படி, மீட்புப் படையினர் 17 இறந்த உடல்களை மீட்டுள்ளனர் மற்றும் எட்டு பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4