துணிவுடன் செயல்பட்டு செயலில் லாபம் காணும் மீன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
துணிவுடன் செயல்பட்டு செயலில் லாபம் காணும் மீன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்:

அசுவினி : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். உங்கள் விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பரணி : இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும். கார்த்திகை 1 : வியாபாரத்தை விரிவு செய்ய மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். ரோகிணி : உங்கள் அணுகுமுறைகளை பிறர் பாராட்டுவர். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். மிருகசீரிடம் 1,2 : பேச்சு வார்த்தையின் மூலமாகவே ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : எந்த செயலும் முடிவு பெறாமல் போகும். தொழிலில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திருவாதிரை : வேலை பளு அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும். புனர்பூசம் 1,2,3 : திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

புனர்பூசம் 4 : எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் செயல் வெற்றியாகும். பூசம் : வெளியூர் பயணம் செல்வீர். அதனால் ஆதாயம் உண்டாகும். நெருக்கடி நீங்கும். ஆயில்யம் : புதிய முயற்சிகளில் ஈடுபட்டு லாபம் காண்பீர். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர் விலகுவர்.

சிம்மம்: 

மகம் : பொருளாதார நெருக்கடி விலகும். வராமல் இருந்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். பூரம் : உங்கள் எதிர்காலத்திற்காக திட்டங்கள் தீட்டுவீர். பிரபலங்களை சந்திப்பீர். எதிர்பார்த்த ஆதாயம் வரும். உத்திரம் 1 : நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி நீங்கும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். அஸ்தம் : தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலிதமாகும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். சித்திரை 1,2: உங்கள் திறமையால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4 : நேற்று இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். சுவாதி : குழப்பம் விலகும். யோசித்து செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். தடைகள் நீங்கும். விசாகம் 1,2,3 : விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்கள் அதிக நன்மையோடு நிறைவேறும் நாள். அனுஷம் : வெளியூர் பயணம் ஆதாயமாகும். நண்பர்கள் உதவியால் ஒரு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கேட்டை : வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தொழிலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.

தனுசு

மூலம் : உடலில் இருந்த சங்கடம் நீங்கும். மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பூராடம் : நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் புதிய பொறுப்பு உண்டாகும். உத்திராடம் 1 : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த தகவல் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : எதிர்ப்பு அகலும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுறு சுறுப்பாக செயல்பட்டுவீர். திருவோணம் : உங்கள் திறமை இன்று வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை நிறைவேற்றி முடிப்பீர். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4 : தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வரவு திருப்தியாகும். சதயம் : குடும்பத்தில் நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும். பூரட்டாதி 1,2,3 : குடும்ப சொத்தில் இருந்த பிரச்னையை பேசித்தீர்ப்பீர். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். 

மீனம்

பூரட்டாதி 4 : துணிவுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்திரட்டாதி : பணி புரியும் இடத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். உறவினர் உறுதுணையாக இருப்பர். ரேவதி : நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பால் விருப்பம் பூர்த்தியாகும்.