பதுளை பொது வைத்தியசாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்க நடவடிக்கை!

#SriLanka #Hospital #Lanka4
Thamilini
2 years ago
பதுளை பொது வைத்தியசாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்க நடவடிக்கை!

பதுளை போதனா வைத்தியசாலையின் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலுவையில் உள்ள 07 கோடி ரூபாய் மின் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வைத்தியசாலையின் மருத்துவ விடுதி, தாதியர் பயிற்சிப் பிரிவு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை நேற்று (10.08) காலை நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்நிலையில், நேற்று பிற்பகல், வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாவை செலுத்தியதாகவும், மீதித் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக எழுத்துமூலம் அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து மின்சாரத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4