ஜப்பானிய அரசால் பாடசாலைக்கு புதிய கட்டிடம் கையளிப்பு

#SriLanka #Lanka4 #Japan
Kanimoli
2 years ago
ஜப்பானிய அரசால் பாடசாலைக்கு புதிய கட்டிடம் கையளிப்பு

ஜப்பானிய அரசினால் பாடசாலைக்கு புதிய கட்டிடம் இன்று கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 அ.தா.க பாடசலைக்கு ஜப்பானிய மற்றும் இலங்கை நட்புறவின் அடையாளமாக ஜப்பானிய மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய கட்டிடத்தொகுதி இன்று கையளிக்கப்பட்டது.

images/content-image/1691741825.jpg

 17.6 மில்லியன் செலவின் புதிதாக அமைக்கப்பட்ட குறித்த கட்டடம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுசி கிடாக்கி அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து கையளித்தார்.

images/content-image/1691741834.jpg

 குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை சமூகம் என பலரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4