ரஜமஹா விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்த நடவடிக்கை!

#SriLanka #Trincomalee #Lanka4
Thamilini
2 years ago
ரஜமஹா விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்த நடவடிக்கை!

திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் அறிவித்தலுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. 

இது குறித்து பிரதேச செயலாளர் விஹாராதிபதிக்குஅறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இது தொடர்பான கட்டுமானங்களுக்கு சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சுட்டிக்காட்டி  குறித்த நடவடிக்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4