இந்தியா மற்றும் பூட்டான் இடையே சர்வதேச ரயில் சேவை ஆரம்பிக்க திட்டம்

#India #Train #service
Prasu
2 years ago
இந்தியா மற்றும் பூட்டான் இடையே சர்வதேச ரயில் சேவை ஆரம்பிக்க திட்டம்

இந்தியா மறறம் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்விடயத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். “இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கும், இந்தியாவிற்கும் இடையேயான ரயில் சேவை இந்தியாவில் அசாமிலிருந்து இயக்கப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் மிகவும் ஆர்வமாக உள்ளது.

 நாம் அதிக வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை பூட்டானுடன் உருவாக்க முயல்கிறோம். இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பாக இது இருக்கும். சர்வதேச ரயில் சேவைக்கான பணிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4