நீரிழிவிற்கு என்ன மாதிரியான உணவு திட்டம் ஏற்றது?
1923ஆம் ஆண்டில் சர் வில்லியம் அஸ்லர் என்பவர் எழுதிய ஒரு மருத்துவ அறிக்கையில், கார்ப்போஹைட்ரேட்டை கிரகிக்கும் உடலின் திறனில் இழப்பு ஏற்படுவதே நீரிழிவு நோயின் அறிகுறி என கூறப்பட்டுள்ளது.
"ஆனால், இன்சுலின் வருகையால், கார்போஹைட் எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது, " என ஜேசன் ஃபாங் கூறுகிறார். உணவு திட்டத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கார்ப்போஹைட்ரேட்களை குறைப்பதன் மூலம் இன்சுலின் அளவை குறைப்பதை இது பரிந்துரைக்கிறது.
உண்ணாமல் இருப்பது, உணவு திட்டம் மற்றும் ஊட்டசத்து ஆகியவை முழுமையாக 2ஆம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிறந்தாகும் என சர்க்கரை நோய் கல்வியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். சுபா ஸ்ரீ ரே கூறுகிறார்.
அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை கொண்ட உணவுகளை நீங்கள் உண்ணலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ஆரஞ்சு, தர்பூசணி, கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம்.
பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது என இதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.
சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு மட்டுமின்றி, சோடா, பிஸ்கெட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், கேக் வகைகள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நாம் உட்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது என சுபஸ்ரீ கூறுகிறார்.
வாரத்தில் இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பது சிறந்த சிகிச்சை என ஜேசன் ஃபாங் கூறுகிறார். பல நூற்றாண்டுகளாக இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"நீரிழிவு கட்டுக்குள் வந்த பின்னரும் கூட, ஒருவர் வாழ்க்கை முறை மாற்றத்தை புறக்கணித்தால், மீண்டும் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்," என பிரக்யானந்தா எச்சரிக்கிறார்.
https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL
தகவல் மற்றும் ஆலோசனை