தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

#India #Tamil Nadu #Delhi #Rain #HeavyRain #Tamilnews
Mani
2 years ago
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4