முதன் முறையாக மனித இதயத்தில் மைரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

#Health #Lanka4
Dhushanthini K
1 year ago
முதன் முறையாக மனித இதயத்தில்  மைரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் முதல் முறையாக மனித இதயத்தில் மைரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சீனாவில் உள்ள பெய்ஜிங் அன்சென் மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 15 நோயாளிகளின் இதய திசுக்களை ஆய்வு செய்தபோது இது கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

அத்துடன்  "பெரும்பாலான திசு மாதிரிகளில் பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக நியூயார்க் போஸ்ட்  அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் அனைத்து இரத்த மாதிரிகளிலும் பிளாஸ்டிக் மாதிரிகளைக் கண்டறிந்துள்ளனர். "விவோ எம்.பி.களில் [மைக்ரோபிளாஸ்டிக்ஸ்] கண்டறிதல் ஆபத்தானது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் ஆடை மற்றும் உணவுப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் பொலிதீன்கள்,  டெரெப்தாலேட் மற்றும் ஜன்னல் பிரேம்கள், வடிகால் குழாய்கள், பெயிண்ட் மற்றும் பலவற்றில் பரவலாகக் காணப்படும் பாலிவினைல் குளோரைடு (PVC) ஆகியவற்றையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்தைக் கொண்டிருக்கலாம் எனவும்,  வாய், மூக்கு மற்றும் உடலில் உள்ள பிற துவாரங்கள் வழியாக மனித உடலுக்குள் நுழையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை உடல் பருமன், நீரிழிவு மற்றும் நாற்பட்ட கல்லீரல் நோய் போன்ற நோய்களுக்கு மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மறைமுகமாக காரணம் என்றும்  கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!