விமான பயணத்தில் சிறுமி முன் மோசமான செயலில் ஈடுபட்ட இந்திய மருத்துவர் கைது

#Flight #Arrest #doctor #Sexual Abuse
Prasu
2 years ago
விமான பயணத்தில் சிறுமி முன் மோசமான செயலில் ஈடுபட்ட இந்திய மருத்துவர் கைது

அமெரிக்க விமானத்தில் சிறுமியின் முன்னர் மோசமான செயலில் ஈடுபட்ட இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி அமெரிக்காவின் ஹொனலுலுவில் இருந்து பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மசாசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கும் சுதிப்தா மொஹந்தி (33) என்ற இந்திய-அமெரிக்க மருத்துவர் ஒருவர் பயணித்துள்ளார்.

அப்போது சுதிப்தா அருகில் 14 வயது சிறுமி அமர்ந்திருந்த நிலையில் அருவருப்பான மற்றும் ஆபாச செயலில் மருத்துவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சுதிப்தா கைது செய்யப்பட்டார்.

இந்த தகவலை பாஸ்டன் எப்பிஐ வெளியிட்டுள்ளது. பாஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் சுதிப்தா ஆஜரானதைத் தொடர்ந்து நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

 குற்றம் நிரூபிக்கப்பட்டால், மருத்துவர் சுதிப்தாவுக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4