நடிகை கீர்த்தி மற்றும் நடிகர் அசோக் செல்வனின் திருமண திகதி அறிவிப்பு
#Actor
#Actress
#TamilCinema
#wedding
Prasu
1 year ago

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் அருண்பாண்டியன். இவர் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவரும் நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.
இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையில் 2 மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில, இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ம் திகதி திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



