தனுசு ராசியினருக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவால் சங்கடங்கள் விலகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
தனுசு ராசியினருக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவால் சங்கடங்கள் விலகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உத்தியோகஸ்தர் செல்வாக்கு அதிகரிக்கும். உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பர். பரணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: பிரபலங்களின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ரோகிணி : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து வந்த முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றிவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்டிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும். திருவாதிரை : அருகிலிருந்து மறைமுகத் தொல்லை கொடுத்தவர் விலகுவார். உங்கள் திறமை வெளிப்படும். புனர்பூசம் 1,2,3 : நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்றை இன்று அடைவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4 : மனதில் குழப்பம் அதிகரிக்கும். முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூசம் : உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர்கள். ஆயில்யம் : சிந்தித்து செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர். சங்கடம் விலகும்.

சிம்மம்

மகம் : திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பூரம் : புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். உத்திரம் 1: அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர். புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். அஸ்தம் : வியாபாரத்தில் வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம் தீரும். வெளியிடத்தில் மதிக்கப்படுவீர். சித்திரை 1,2 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

துலாம்

சித்திரை 3,4 : தடை விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி : அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். விசாகம் 1,2,3 : வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். தொழிலை விரிவு செய்யும் சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம் : உங்கள் முயற்சி இழுபறிக்குபின் வெற்றியாகும். கொடுத்த பணம் வசூலாகும். புதிய சொத்து வாங்குவீர். கேட்டை : அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பம் பலிதமாகும். சிந்தித்து செயல்படுவீர்.

தனுசு

மூலம் : உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் சங்கடத்தைப் போக்கும். பூராடம் : உங்கள் எதிர்பார்ப்பு பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் சில சிக்கல்கள் தோன்றும். உத்திராடம் 1 : அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் உங்கள் முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். திருவோணம் : கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர். உங்கள் முயற்சி நிறைவேறும். நிதி நிலை மேம்படும். அவிட்டம் 1,2 : எதிர்பார்த்த தகவல் வரும். உங்களை விமர்சனம் செய்தவர்கள் பாராட்டுவர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். சதயம் : மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3 : இழுபறியாக இருந்த ஒரு முயற்சி முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : குடும்பத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். முன்னோர்களின் ஆசியுண்டு. உத்திரட்டாதி : பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அலுவலக நெருக்கடி நீங்கும். ரேவதி : குடும்ப சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர். வியாபாரத்தில் திடீர் ஆதாயம் ஏற்படும்.