கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்துள்ள மாற்றம்!

#SriLanka #Airport
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்துள்ள மாற்றம்!

விமான நிலையத்திற்குள் நுழையும் முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் எவ்வித ஆய்வும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பயணிகளின் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இது ஒரு சிக்கல் நிலையே என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எனினும், விமான நிலையத்தை விட்டு வெளியேறும் நபர்கள் பரிசோதிக்கப்பட்டாலும், விமான நிலைய வளாகத்திற்குள் நுழைபவர்கள் பரிசோதிக்கப்படுவதில்லை.

 இது விமான நிலையத்தின் உள்ளக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4