யாழ். சாவகச்சேரியில் விபத்து: பாடசாலை மாணவன் உயிரிழப்பு

#SriLanka
Prabha Praneetha
2 years ago
யாழ்.  சாவகச்சேரியில் விபத்து:  பாடசாலை மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (13) முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

 இவ் விபத்தில் யாழ். இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4