வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பலரிடம் பண மோசடி!

#SriLanka #Batticaloa #Arrest #Police #Crime
Mayoorikka
2 years ago
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பலரிடம் பண மோசடி!

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக ஒருவரிடம் 4 லட்சத்து 50,000 ரூபா வீதம் 22 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபா பணமோசடி செய்த அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்று (13) கொழும்பில் இருந்து வந்த வேலைவாய்ப்பு பணியகத்தினரால் முற்றுகையிட்டு போலி முகவர் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 கொழும்பு வேலைவாய்ப்பு பணியகத்தில் மட்டக்களப்பு, அமிர்தகழி பிரதேசத்தைச் சேர்ந்த போலி முகவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தலா ஒருவர் 4 லட்சத்து 50,000 ரூபாவை வழங்கிய நிலையில் அவர் வெளிநாட்டுக்கு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் போலி முகவருக்கு எதிராக இருவர் முறைப்பாடு செய்திருந்தனர்.

 இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தொடர் விசாரணையில் குறித்த நபர் தலா 4 லட்சம் ரூபா வீதம் 22 பேரிடம் பணமோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

 இதனை தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் உதவியுடன் குறித்த போலி முகவரின் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்து மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4