அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும்

#SriLanka #Tourist #Lanka4
Kanimoli
2 years ago
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும்

அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை, தற்போது முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஆனாலும் நாம் எதிர்பார்த்துள்ள இலக்கை இன்னும் அடையவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர், படிப்படியாக நாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது நாடு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஸ்திர நிலையை அடைந்து வருவதால் எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். எனவே நாம் அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

 அதற்குப் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தமது சொந்தக் கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக பயன்படுத்த விருப்பமுள்ள கட்டிட உரிமையாளர்கள் சுற்றுலா சபையில் பதிவு செய்து கொள்ளுமாறும், அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுவதுடன் நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து சுற்றுலாத் துறைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் மோசடிகள் போன்ற கசப்பான அனுபவங்கைளைத் தடுக்க புதிய கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுற்றுலா செயலி ஒன்றை உருவாக்கும் பணிகள் நடந்து வருதாகவும், குறித்த செயலி, பயன்பாட்டுக்கு வந்தவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான இடையூறுகள், குறிப்பாக நிதி மோசடிகள் இதன் மூலம் தடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4