கிராமங்களின் சுயாதீனத்தில் தலையிடுவதை கட்சிமுறை அரசியல் தவிர்த்தல் வேண்டும் - கரைச்சி இணைப்பாளர்

#SriLanka #Kilinochchi #Lanka4 #இலங்கை #கட்சி #லங்கா4 #parties
கிராமங்களின் சுயாதீனத்தில் தலையிடுவதை கட்சிமுறை அரசியல் தவிர்த்தல் வேண்டும் - கரைச்சி இணைப்பாளர்

கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தலையிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.

 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிராமிய புத்தெழுச்சி குழுக் கூட்டங்களுக்கான கிராம மட்ட உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சி முறை அரசியலின் போட்டிக்குள் கிராமத்தின் பொது அமைப்புக்களும் சிக்கிக் கொள்வதால் அவற்றின் சமுக பணி நன்மைகளை மக்கள் அடைந்து கொள்வதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்; 

 ஒரு சமுக மட்ட பொது அமைப்பின் நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும் போது குறித்த பொது அமைப்பை சார்ந்து அதில் அங்கம் வகிக்கும் மக்களும் தம்மை ஆதரிப்பர் என ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமக்குள் எதிர்பார்க்கின்றன.

 ஆனால் இதற்காக தமக்கிடையே கட்சிகள் ஏற்படுத்தி கொள்ளும் முரண்பாடுகளால் அனைத்து கட்சிகளையும் நிராகரித்துவிடும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவதை இக்கட்சிகள் கண்டு கொள்ள தவறிவிடுகின்றன.

 இதன் மறுவிளைவாக கிராமத்து மக்களை கூறுபடுத்தி அவர்கள் மத்தியில் தேவையற்ற மோதல்களை உருவாக்கி விடும் நிலைக்கு அரசியல் கட்சிகள் தள்ளப் பட்டிருப்பது தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு துர்ப்பாக்கியமான நிலமையாகும். 

images/content-image/1692028341.jpg

 இந்த நிலமைகள் களைந்தெறியப்பட வேண்டும். புத்தெழுச்சி குழு கூட்டங்கள் கிராமங்களில் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் கூட்டு தலைமைத்துவமாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதுடன் அங்கு வாழும் மக்களை அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அவர்களை சொந்தக் காலில் நிற்க செய்தல் என்பதையும் தமது குறியாக கொண்டிருக்கின்றன.

 இதனை குறித்த அரசியல் கட்சிகளின் கிராம மட்ட அமைப்பாளர்கள் மேலான கவனத்தில் எடுத்து அங்குள்ள மக்களின் நலனை முன் நிறுத்தி தமக்குள் மோதலை தவிர்த்து ஒற்றுமையுடன் பணியாற்றும் பண்பை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

images/content-image/1692028389.jpg

 கிராமிய மக்களின் மேம்பாட்டை கவனத்தில் எடுத்து கட்சிகள் ஒற்றுமையுடன் பொதுப் பணிகளில் கவனம் செலுத்தும் போதே தமக்கான பொருத்தமான அரசியல் தலைமைத்துவத்தை அந்த மக்களும் வகைதெரிந்து கொண்டு அதனை தமக்கான அரசியல் தலைமைத்துவமாக எதிர் காலத்தில் வரிந்து கொள்ளும் சூழலையும் உருவாக்க முடியும். 

 இதனை கிராமங்களில் செயற்பாட்டில் இருக்கும் அனைத்து கட்சி அமைப்பாளர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

 ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இருந்து அதன் உத்தியோகத்தர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4