சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என அறிவிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என அறிவிப்பு!

வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.  

வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு சிலர் தீ வைப்பது கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதனால், தோட்டங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட முடியாத நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என, வாரியம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.  

அத்துடன், ஒருவர் தனது நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4